Tuesday, July 17, 2018

கற்பழிப்பு~வலியின் உச்சம்.


கற்பழிப்பு ~ ஒரு பெண்ணாக யாரும் சந்திக்க

கூடாத ஒரு வக்கிரம்.


ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் செய்யும் அநியாயங்களின் உச்சம்.இப்படிப்பட்ட ஆண்கள் இரண்டு கால் மிருகங்களாய் வாழும் மனித இனத்தின் எச்சம் .

ஒரு ஆணாய்,அண்ணனாய்,தந்தையாய்,மனிதனாய்,இதை எப்படி ஏற்றுக்கொள்கிறோம்???

அவளுக்கு 3 வயதோ?? 30 வயதோ?? - கவலை இல்லை.

அவள் வயதுக்கு வந்தாளா?? இல்லையா?? - தேவை இல்லை.

அவள் பால் குடிக்கும் மழலையா?? பால் கொடுக்கும் தாயா?? - இரக்கம் இல்லை

தான் செய்வது தவறுதானா?? - உணரவில்லை 


தண்டனைக்கு பயமில்லை , இறக்க உணர்வு சிறிதும் இல்லை ,மனதில் ஈரம் கொஞ்சமும் இல்லை.இறைவன் மீதும் பயமில்லை.

இதை தட்டி கேட்க , தடுத்து நிறுத்த சட்டம் இல்லை.

மொத்தத்தில் மனிதனாய் இங்கு யாரும் இல்லை.

கண்ணு கலங்குது,நெஞ்சு வெடிக்குது,என்ன பன்ன போறன் நான்- என் சகோதரிகளை பாதுகாக்க.

யாரை கூட்டு சேப்பன் நான் குற்றவாளிகளை கொன்னு புதைக்க.

ஆட்சி இல்ல - அன்பு உண்டு.

காசு இல்ல  - கருணை உண்டு.

எங்க போய் சொல்லுவன்  எனக்கும் ஒரு பொம்பள புள்ள உண்டு .




  

Thursday, May 10, 2018

உயிரற்ற சொல்..!!!!

இறைவனின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்
அன்பான என் சமுதாயமே!!!
         நீ எங்கே செல்கிறாய்???.எதை தேடுகிறாய்???.
        நான் பிறக்கும் போது நீ ஒரு தோற்றம் கொண்டிருந்தாய்.
        நான் வளரும் போது நீ வேறு பரிமாணத்திற்கு தயாராகி கொண்டிருந்தாய்,
        இதை அறியாமல் நானும் வளர்ந்து விட்டேன் ஒரு இளைஞனாக.
        இளைஞன் என்ற ஒற்றை வார்த்தைக்குள் எவ்வளவு பொறுப்புகள்,எதிர்பார்ப்புகள்,
        அவமானங்கள்.இவை அனைத்தையும் பொறுத்துக்கொண்டு தன்னையும் 
        தான் சார்ந்த சமுதாயத்தையும் முன்னேற்ற வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே 
        இங்கு பலகோடி இளைஞர்களின் குறிக்கோள்.
       ஆனால் என் சமுதாயமே நான் கற்றுக்கொண்ட எதுவும் என்னையும் உன்னையும் 
       முன்னேற்ற எனக்கு பயன்படவில்லை.
       விடை புரியாமல் தவித்தேன்.எனக்கு அழகான ஒரு சமுதாயம் இந்த உலகில் 
       வாழ்ந்து கொண்டிருப்பதாக சொல்லி சொல்லி வளர்த்தவர்களிடம் அது எங்கே 
       என கேட்டேன் ???.அவர்களிடம் பதில் இல்லை.

       அவர்கள் சொன்னது போல் இந்த சமுதாயம் இல்லை.அவர்கள் சொல்லி வளர்த்த 
       அத்தனை சொற்களும் உயிரற்ற சொற்களாய் என் முன்னே நின்றது.
       
       

       








கற்பழிப்பு~வலியின் உச்சம்.

கற்பழிப்பு ~ ஒரு பெண்ணாக யாரும் சந்திக்க கூடாத ஒரு வக்கிரம். ஒரு பெண்ணிற்கு ஒரு ஆண் செய்யும் அநியாயங்களின் உச்சம்.இப்படிப்பட்ட ஆண்க...